கேரளாவுக்கு கடத்த இருந்த 17 டன் ரேஷன் அரிசி
திருநெல்வேலி:
நெல்லை அருகே சுத்தமல்லியில் குடோனில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வது தற்போது அதிகரித்துள்ளது. சோதனை சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு, பறக்கும் படையினர் ரோந்தையும் மீறி அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவ்வப்போது ரயில்களிலும், லாரியிலும் அரிசி கடத்தல் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று நெல்லை அருகே சுத்தமல்லியில் இருந்து லாரியில் கேரளாவிற்கு அரிசி கடத்திச் செல்வதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சுத்தமல்லி விலக்கு பகுதியில் அதிகாரிகள் மறைந்து நின்று கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கப்பட்டு தார்பாய் போடப்பட்டு மூடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து லாரி டிரைவர் பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ், வத்தலகுண்டை சேர்ந்த கிளீனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுத்தமல்லி அருகே பட்டன்கல்லூரியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்ததாகவும் கேரளாவிற்கு அரிசியை கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த குடோனுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
லாரியில் இருந்த 100 மூட்டை, குடோனில் இருந்த 200 மூட்டை ரேசன் அரிசி மற்றும் லாரியை போலீசார் கைப்பற்றினர். இதன் மொத்த எடை 17 டன் ஆகும்.
ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த பேட்டையை சேர்ந்த துரை, நவாஸ் ஆகிய இருவரும் ஏஜென்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ரமேஷ், கிளீனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பியோடி துரை, நவாஸ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications