இலவச கலர் டிவி-30 லட்சம் டி.விக்கள் வாங்க டெண்டர்கள் திறப்பு
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டி.வி திட்டத்துக்கு 30 லட்சம் டிவிக்களை தயாரித்து வழங்குவதற்கான போட்டியில் ஈடுபட்ட நிறுவனங்களின் டெண்டர்கள் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திறக்கப்பட்டன.
இதில் தகுதியில்லா
த 5 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதுவரை இரண்டு கட்டமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டமாக 30 லட்சம் இலவச கலர் டி.விக்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை வாங்குவதற்கு தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியது. டி.விக்களை தயாரித்து வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்து டெண்டர்களை சமர்பித்தன.
இந்த டெண்டர்களை திறக்கும் நிகழ்ச்சி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலர் டிவி கொள்முதலுக்காக அமைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் குழு, தொழில்நுட்பக் குழுவினர், எல்காட் நிறுவன அதிகாரிகள், டெண்டர் கோரிய டி.வி. நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தகுதி இல்லாத 5 நிறுவனங்களின் டெண்டர்களை நிராகரித்துவிட்டு எஞ்சிய 17 நிறுவனங்களின் டெண்டர்கள் திறக்கப்பட்டன.
இதையடுத்து எந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன என்ற விவரத்தை தமிழக அரசு இன்று அறிவிக்கவுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள டிவி கொள்முதலுக்கான எம்.எல்.ஏக்கள் குழுவில் அைமச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம், விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் புரட்சி பாரதம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications