ஜெயலலிதாவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
முதல்வர் கருணாநிதி ம
ற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறு புகார் கூறிய ஜெயலலிதாவுக்கு திமுக வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீசில் அவர் கூறியிருப்பதாவது,
என்னுடைய கட்சிக்காரர்களாகிய முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ள விஷயம் தொடர்பாக இந்த நோட்டீசை தங்களுக்கு அனுப்புகிறேன்.
கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த நீங்கள் எங்களது கட்சிக்காரர்கள் இருவர் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறீர்கள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதாக சில வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவலாகும். உங்கள் வீட்டுக்குள் நுழைந்தவர் உங்கள் கட்சியான அதிமுகவின் அனுதாபி என்று நம்பப்படுகிறது. அவருக்கும் எனது கட்சிக்காரர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு தொண்டாற்றுவதை திசை திருப்பும் வகையில் இப்படி புகார் கூறி இருக்கிறீர்கள்.
நீங்கள் கூறிய புகாருக்காக இந்த நோட்டீசை கண்ட இரு தினங்களுக்குள் (48 மணி நேரத்திற்குள்) வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது சிவில், கிரிமினல் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று நோட்டீசில் கூறியுள்ளார் பாரதி.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவை வசமாக சிக்க வைத்தவர் பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications