பெண் ஊழியருக்கு அநீதி - கலெக்டருக்கு அபராதம்
தூத்துக்குடி:
அங்கன்வாடி ஊழியையை மன நோயாளி என்று கூறிய தூத்துக்குடி மாவட்ட திட்ட அதிகாரி மற்றும் இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.பழனியாண்டி ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அபராதம் விதித்துள்ளது.
தூத்துத்குடி மாவட்டம் சங்கரபேரியில் அங்கன்வாடி மைய ஊழியராக பணியாற்றி வருபவர் தமிழரசி. கடந்த 25 வருடங்களாக அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு வயதான பெற்றோர்கள் இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந் நிலையில் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி மாவட்ட திட்ட அதிகாரி பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆளான தமிழரசி தனக்கு நீதி வேண்டி மதுரை உயர்நீதிக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திட்ட அதிகாரியும், குழந்தைகள் திட்ட மேம்பாடு அதிகாரியும் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழரசி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கிராம மக்கள் புகார் தெரிவித்ததால் தான் பணி நிக்கம் செய்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, தமிழரசி மன நலத்துடன் உள்ளார் என மதுரை அரசு மருத்துவ மனை சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மனுதாருக்கு மன நலம் சரியில்லை என அதிகாரிகள் கூறுவது முறையல்ல. சரியும் அல்ல. இது துரதிஷ்டமானது.
இந்த விஷயத்தில் அலட்சியத்துடன் செயல்பட்ட மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட அதிகாரி, குழந்தைகள் திட்ட மேம்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கிறேன். இதை மனுதாரரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications