தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை கடற்படை
நாகப்பட்டனம்:
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரிகாலன், முருகேன், சிலம்பு என்கிற சிலம்பரசன், சசிபாலன் மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து நான்கு பேரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
பின்னர் அவர்களது மீன் பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன் உள்ளிட்டவற்றை கடலில் வீசி விட்டு இலங்கை கடற்படையினர் போய் விட்டனர்.
கடலில் நீந்தியபடி தத்தளித்த நான்கு மீனவர்களையும், அப்பகுதி வழியாக வந்த மற்ற மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் நாகை மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications