கேரளாவில் லாரி ஸ்டிரைக்: தமிழகம் பாதிப்பு!
நாமக்கல்:
கேரளாவில் லாரி ஸ்டிரைக் நடப்பதால் தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன.
கேரளாவில் லாரி தொழிலாளர் நல நிதிக்கு (இஎஸ்ஐ) ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.200யை லாரி உரிமையாளர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தபின் இதை மாற்றி ஒரு தொழிலாளிக்கு தலா ரூ.200 வீதம் நல நிதி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் கடந்த 30 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகை அனைத்து லாரி உரிமையாளர்களும் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்திலிருந்து தினமும் கேரளாவுக்கு செல்லும் 5,000க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சரக்குகளுடன் கிளம்பிவிட்ட லாரிகள் கேரள எல்லைப் பகுதிகளில் பல கி.மீ. தூரத்துக்கு நின்று கொண்டுள்ளன.
இதனால் நாமக்கல் பகுதியில் லட்சக்கணக்கான முட்டைகளும், கொடைக்கானல்-மதுரை, கோவை சுற்று வட்டாரப் பதிகளில் காய்கறிகளும், பருப்பு வகைகளும் தேங்கியுள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications