ஜெ.வின் கற்பனை வளம்-ராமதாஸ் 'பாராட்டு'!
விழுப்புரம்:
வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் மூடைகளை இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 6 மாதங்களுக்கு பிறகு கூட்டப்படும் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடக்கும் கூட்டத் தொடரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க காலம் போதாது. குறைந்தபட்சம் 10 தினங்களாவது ஒதுக்கினால் தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்க முடியும்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போட்டியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.
சிமெண்ட் விலை மேலும் உயரும் என்று தற்போது செய்தி வெளிவந்துள்ளது. விலை மேலும் உயர்ந்தால் கட்டிடத் தொழில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதனை தவிர்க்க சிமெண்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
ஜெயலலிதா தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதற்காக அவரைக் கொல்வதற்கு அமைச்சர் ஸ்டாலின் ஆள் அனுப்பினார் என்று ஜெயலலிதா கூறுவது அவரது கற்பனை வளத்தை தான் காட்டுகிறது என்றார் ராமதாஸ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications