For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள வன விலங்குகள் காப்பகம்-முண்டந்துறை புலிகள் சரணாலாயம் இணைப்பு

By Staff
Google Oneindia Tamil News
செங்கோட்டை: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பெரியார் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை தமிழகத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தோடு இணைக்க உலக வங்கி நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் முடுகபஞ்சால் என்ற இடத்தின் வழியாக இரு சரணலாயங்களுக்குள்ளும் யானைகள், புலிகள் சென்று வர பாதை (corridor) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை எழிலுடன் கூடிய வளமான பகுதியாகும். இந்த பகுதியை பாதுகாக்க உலக வங்கி உதவ முன் வந்துள்ளது.
இதன் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோணியிலிருந்து கொல்லம்-திருவனந்தபுரம் மாவட்டங்கள் வரை பரவியுள்ள பெரியார் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை ஓட்டிய பகுதிகளில் உள்ள புலிகள், யானைகள் தமிழகத்தில் உள்ள களக்காடு-முண்டத்துறை பகுதிகளுக்கு வந்து பாதை அமைக்கப்படும்.

இந்த இரண்டு பகுதிகளையும் செங்கோட்டையை அடுததுள்ள ஆரியங்காவு கணவாய் பகுதிதான் பிரிக்கிறது. இப்பகுதி வழியாக அனைத்து வகை மிருகங்களும் இரண்டு பகுதிகளுக்கும் சென்றுவந்த நிலையில் தமிழ்நாடு-கேரளா போக்குவரத்து அதிகரித்ததால் இப்பகுதி துண்டிக்கப்பட்டு சிங்கம், சிறுத்தை, யானை மற்றும் பல்வேறு மிருகங்கள் ஆரியங்காவு பகுதியை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் மத்திய அரசு பெரியார் தேசிய பூங்காவையும், களக்காடு-முண்டத்துறை புலிகள் சரணாலாயத்தையும் இணைக்க திட்டம் வகுத்தது. இதற்கு ஆகும் ரூ. 20 கோடியை வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு களக்காடு-முண்டத்துறை பகுதியில் உள்ள விலங்குகள் கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் சரணாலாய பகுதிகளுக்கு சென்று வரும் வகையில் ஆரியங்காவு முடுகப்பஞசால் பகுதியில் காரிடார் அமைக்கப்படும்.

ேமலும் இதன்மூலம் 10,000 சதுர கிமீ பகுதியும் பாதுக்காக்கப்பட உள்ளது. வரும் 6 ஆணடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் பொதுமக்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆரியங்காவு பகுதி முலம் இரு பக்கங்களிலும் யானை, புலி உட்பட அனைத்து வகை மிருகங்களும் எவ்வித தடையும் இன்றி எளிதாக சென்று முடியும்.

இத்திட்டத்தின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு வார காலமாக இத்திட்டத்திற்காக முடுகப்பஞ்சால் எஸ் வளைவு, கோட்டைவாசல், ஆரியங்காவு உள்ளிட்ட வனப் பகுதிகளை மத்திய அரசின் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அந்தக் குழுவினர் கூறுகையில்,
முடுகப்பஞ்சால் என்ற பகுதியில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஆகும். எனவே ஆரியங்காவு, கோட்டைவாசல் பகுதியில் மாற்று திட்டம் மேற்கொள்ளவும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

மேலும் வாகனங்கள் செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்டால் தான் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். அதற்காக ஆய்வு நடத்தியுள்ளோம். இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் வன உயிரியல்துறையிடம் சமர்பிப்போம் என்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X