துபாய் விமானத்தில் பெண்ணுக்குப் பிரசவம்
துபாய்: பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே பிரசவ வலி வந்து ஒரு குழந்தையைப் பெற்றார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு வழியிலேயே இன்னொரு குழந்தையும் பிறந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நசீம் பீபி (22). இவர் ஜெட்டாவிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு எமிரேட்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணித்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பீபிக்கு, விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிரசவ வலி வந்தது. சில நிமிடங்களிலேய ஒரு பெண் குழந்தை அவருக்குப் பிறந்தது.
இதையடுத்து விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. நசீம் பீபியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அல் வாசி மருத்துவமனையில் பீபி சேர்க்கப்பட்டார்.
தற்போது பீபிக்கு ஒரு புதுப் பிரச்சினை எழுந்துள்ளது. மருத்துவமனை சிகிச்சைச் செலவாக அவர் 5000 திர்ஹாம்களை கட்ட வேண்டுமாம். ஆனால் அவ்வளவு பணம் நசீம் பீபியிடம் இல்லை. இதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மறுத்து வருகிறதாம்.
இதுகுறித்து நசீம் பீபி கூறுகையில், மருத்துவமனை செலவாக நான் 5000 திர்ஹாம் பணம் கட்ட வேண்டியுள்ளது. ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனக்கும், பிறந்துள்ள எனது குழந்தைகளுக்கும் யார் உதவுவார்கள் என்று தெரியாமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பீபி.
தற்போது பீபியை பிரச்சினையிலிருந்து மீட்க பாகிஸ்தான் தூதரகம் களத்தில் இறங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications