பாங்காக்கிலிருந்து சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திடீர் பயணமாக பாங்காக் சென்றிருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை திரும்பினார்.
அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு திடீர் பயணமாக பாங்காக் சென்றிருந்தார். அவரது திடீர் பயணம் குறித்து சலசலப்பு நிலவியது.
தனிப்பட்ட பயணமாக ஸ்டாலின் பாங்காக் சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் அவரது திடீர் பயணத்திற்குப் பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி கமலா அம்மாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications