ஐசிஎல் சின்னம் வெளியீடு - விளம்பரத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு
மும்பை: கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) தனது அமைப்பின் சின்னம் மற்றும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முதலாவது 20-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நவம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்து நாடு திரும்பியபோது, இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்புகளைக் கொடுக்கவும், இளம் திறமையாளர்களை அடையாளம் காட்டவும் இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பை சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமம் உருவாக்கியது.
இந்த அமைப்பின் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இந்திய கிரிக்கெட் லீக் அமைப்பின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த அமைப்பின் உலகப் புகழ் பெற்ற வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான இளம் வீரர்களும் கூட இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் லீக்கின் சின்னம் மற்றும் விளம்பரம் ஆகியவை மும்பையில் வெளியிடப்பட்டது. ஓ.அண்ட் எம் விளம்பர நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் செயல் கிரியேட்டிவ் இயக்குநர் அனுப் சிட்னிஸ் மற்றும் பிராண்ட் மேனேஜர் சூப்பர்வைசர் ஹிதேஷ் பட்டேல் ஆகியோர் கூறுகையில்,
இந்த சின்னம், சிவப்பு கிரிக்கெட் பந்தின் பின்னணியில், இந்திய கிரிக்கெட் லீக்கின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
லீக்கின் வாசகமாக "where dreams can come alive" என்பது இடம் பெற்றஇருக்கும். இந்த சின்னத்தையும் விளம்பரத்தையும் இந்திய கிரிக்கெட் லீக் மீடியாக்கள் மூலமாக பிரபலப்படுத்தும் என்றனர்.
இந்திய கிரிக்கெட் லீக்கின் சின்னம் மற்றும் விளம்பர வாசகத்தை பிரபலப்படுத்தும் விளம்பர பிரசாரம் நவம்பர் 7ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விளம்பரத்துக்கான பிராண்ட் அம்பாசடராக கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணிகள் அறிவிப்பு:
இதேபோல இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கொல்கொத்தா டைகர்ஸ், ஹைதராபாத் ஹீரோக்கள், டெல்லி ஜெட்ஸ், சண்டிகர் லயன்ஸ், மும்பை சாம்ப்ஸ், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என ஆறு அணிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த அணிகளுக்கான விளம்பரப் பொறுப்பையும், ஓ அண்ட் எம் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தனித் தனியாக விளம்பரங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த விளம்பரப் பிரசாரத்திற்கு மட்டும் ரூ. 25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications