கார்த்திக்குக்கு போலீஸ் திடீர் தடை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டதை பார்க்க இன்று அங்கு வர திட்டமிட்டிருந்த பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக்குக்குப் போலீஸார் திடீர் தடை விதித்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு கடந்த 4ம் தேதி நள்ளிரவில் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பல் கல் வீசி தாக்கியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். தேவர் சிலையை உடைத்தது அதே ஊரை சேர்ந்த குருசாமி, முருகன், காளிராஜ் மற்றும் ஒருவர் என அடையாளம் தெரிந்தது. இவர்கள் தேமுதிக பிரமுகர்கள்.
இதையடுத்து குருசாமி, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காளிராஜ் ஏற்கனவே பஸ் உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட குருசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமுலத்தில் நாங்கள் தேமுதிகவைச் சேர்ந்தவர்கள். நாங்களும், மற்றொரு கட்சியினரும் கட்சி கொடி, கொடி கம்பங்களை நட்டபோது ஊரில் எதிர்ப்பு கிளம்பியது.
நமது சமுதாய தலைவர் சிலையையும், கொடியையும் தவிர வேறு கொடிகளை பறக்க விடக் கூடாது என சிலர் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து சிலையை சேதப்படுத்தினோம் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக்குக்குத் தடை:
இந்த நிலையில் இந்த இடத்திற்கு இன்று கார்த்திக் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. உடைந்த தேவர் சிலையை அவர் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்த கார்த்திக் வேலாயுதபுரம் செல்ல தயாராகும் போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே சிலை உடைப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்பு கருதி அவரை அங்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications