குடிபோதையில் நிர்வாண நடனம் ஆடிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் குடிபோதையில் நிர்வாண நடனம் ஆடிய அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவகத்தில் பணியாற்றுபவர் உமாபதி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி குடித்து விட்டு அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

வழக்கம் போல் குடித்து விட்டு நேற்று அலுவலகத்துக்கு வந்த உமாபதி சக ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இவரின் இந்த செயலை பார்த்து பெண் ஊழியர்கள் முகம் சுளித்தனர். நேரம் அதிகமாக, அவருக்கு போதை தலைக்கு ஏறியதில் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளார்.

திடீரென ஆவேசம் அடைந்த உமாபதி தனது பேண்ட், சட்டையை கழற்றி விட்டு நிர்வாண நடனம் ஆடியுள்ளார். உமாபதியின் இந்த அதிரடி செயலை கண்டு திடுக்கிட்ட பெண் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியில் ஓடினர்.

இது குறித்து உடனடியாக முதன்மைக் கல்வி அதிகாரி செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் விசாரணை நடத்தி நிர்வாண நடனம் ஆடிய உமாபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+