For Daily Alerts
Just In
சென்னை-ஏர் டெக்கான் விமானம் மீது மோதிய ஜீப்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர் டெக்கான் விமானம் மீது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜீப் மோதியதில் விமானம் சேதமடைந்தது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.
விமான நிலையத்திற்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஜீப்பை ஓட்டிய ஜோய்ஸ் என்ற டிரைவர் விதிகளை மீறி விமானம் நிறுத்தப்பட்ட இடத்தில் அதை ஓட்டிச் சென்றார்.
அப்போது ஏர் டெக்கன் விமானத்தின் மீது ஜீப் மோதியது. இதில் டிரைவர் ஜோய்ஸ் லேசான காயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ஏர் டெக்கான் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!