ஆபாச சிடி தயாரித்த வாலிபருக்கு போலீஸ் வலை
திருநெல்வேலி: நெல்லையில் ஆபாச படங்களின் டிவிடி மற்றும் சிடிக்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவரது வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆபாச பட டிவிடி, சிடிக்களையும் அதை தயார் செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர்க், காப்பியர்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவருடைய வீட்டிற்கும் சீல் வைத்தனர்.
நெல்லை, தச்சநல்லூர் அருகேயுள்ள மேலக்கரை கிராமத்தில் திருட்டு விசிடி மற்றும் டிவிடிகள் லைசென்ஸ் இல்லாமலும், அரசு அனுமதி பெறாமலும், தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் தனிப் படையினர் விசாரணை நடத்தி மேலக்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர்.
ஆனால் திருட்டு விசிடி தயாரிப்பதாக சொல்லப்பட்ட அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டை போலீசார் பூட்டை உடைத்து திறந்து சோதனை நடத்தினர்.
வீட்டிற்குள் அரசின் லைசென்ஸ் பெறாத சிவாஜி, மற்றும் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட சில சினிமா சிடிக்கள் இருந்தன. மேலும் அந்த வீட்டில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஆபாச டிவிடி மற்றும் சிடிக்கள் இருந்தன.
அவற்றையும் கம்ப்யூட்டர், சிடி ரைட்டர்கள், டிவிடி காப்பியர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வீட்டிற்கு சீல் வைத்தனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கூறுகையில்,
திருட்டு சிடி தயாரித்த காமராஜ் என்பவர் சிந்துபூந்துரையை சேர்ந்தவர். அவர் போலீசார் சோதனை நடத்த வருவது தெரிந்து தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவருடன் வேறு யாராவது தொடர்பு வைத்து இந்த டிவிடிக்களை விற்பனை செய்தார்களா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காமராஜ் மீது நெல்லை, ஜங்சன் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications