For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிகவில் முன்னாள் டிடி செய்தி இயக்குநர் எச்.ராமகிருஷ்ணன்

By Staff
Google Oneindia Tamil News

Ramakrishnan
சென்னை: சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி இயக்குநரும், தற்போது பாஜாக மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ள எச்.ராமகிருஷ்ணன் தேமுதிகவில் இணைந்துள்ளார்.

சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி இயக்குநராகப் பணியாற்றியவர் எச்.ராமகிருஷ்ணன். தனது உடல் ஊனத்தையும் மீறி பல சாதனைகளைப் படைத்தவர்.

செய்தி ஆசிரியராக மட்டுமல்லாமல் நல்ல பாடகராக, எழுத்தாளராக பன்முகம் கொண்டவர். கே.பாலச்சந்தரின் வானமே எல்லை படத்தில் சிறு வேடத்தில் தோன்றி இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையிலான கேரக்டரில் நடித்தவர்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்து அந்தக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார் ராமகிருஷ்ணன்.

இந்த நிலையில் அவர் தேமுதிகவில் இணைந்துள்ளார். கட்சித் தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி தேமுதிகவில் இணைந்தார் ராமகிருஷ்ணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X