ஆஸி. தேர்தலில் ஹோவர்ட் படுதோல்வி - புதிய பிரதமர் கெவின் ரூட்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜான் ஹோவர்ட் படு தோல்வி அடைந்தார். அவரது ஆட்சியும் பறிபோனது. தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் கெவின் ரூட் புதிய பிரதமராகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத் தேர்தலில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த ஹோவர்ட் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
ஆட்சியைப் பறி கொடுத்த ஹோவர்ட், தனது சொந்தத் தொகுதியான பென்னிலாங்கிலும் படு தோல்வி அடைந்துள்ளார். அங்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 1929ம் ஆண்டுக்குப் பிறகு பதவியில் இருந்த ஒரு பிரதமர் சொந்த்த தொகுதியில் தோற்ற பரிதாபத்தை ஹோவர்ட் சந்தித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது கட்சி நிர்வாகிகளோடு, தொண்டர்களைச் சந்தித்தார் கெவின் ரூட். அவர்கள் மத்தியில் ரூட் பேசுகையில், புதிய பாதையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்திச் செல்வேன். ஆஸ்திரேலியாவின் நட்பு நாடுகளோடு உறவு வலுப்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்க பாடுபடுவேன்.
ஆசிய நாடுகள் முழுமைக்கும், ஐரோப்பாவில் உள்ள பிற நட்பு நாடுகளுக்கும் நாம் இன்று நல்ல செய்தியை அனுப்பியுள்ளோம். ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய படைகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ரூட்.
கடந்த 1996ம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஹோவர்ட் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. அதன் பின்னர் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
ஹோவர்ட்டுக்கு எதிரான மக்கள் அதிருப்தி, அவரது வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்பட்ட பெரும் அதிருப்தி ஆகியவைதான் அவரது ஆட்சிக்கு உலை வைத்து விட்டன.
மாறாக, கெவின் ரூட், ஹோவர்ட்டைப் போல அல்லாமல், அமெரிக்காவை வெறுப்பவர். ஆசிய நாடுகள் மீது பாசம் கொண்டவர். சீனாவுடனும், பிற ஆசிய நாடுகளுடனும் உறவை வலுப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். மேலும், ஈராக்கில் ஆஸ்திரேலிய படைகள் இருப்பதையும் எதிர்த்து வருபவர்.
ரூட் பிரதமர் பதவிக்கு வருவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் அமெரிக்காவுடனான ஆஸ்திரேலியாவின் நெருக்கமும் குறையும் எனத் தெரிகிறது.
பொதுத் தேர்தலில் ரூட் கட்சி வெற்றி பெற்றாலும் கூட, நாடாளுமன்ற மேல் சபையில் (செனட்) இன்னும் ஹோவர்ட் கட்சிக்குத்தான் பெரும்பான்மை பலம் உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம்தான் செனட் சபைக்கு தேர்தல் வருகிறது. எனவே அதுவரை ஹோவர்ட் கட்சியினரின் இடைஞ்சல்களை தொழிலாளர் கட்சி சந்திக்க வேண்டியிருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications