2 சீன சாப்ட்வேர் என்ஜீனியர்கள் சாலை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
பீதர் (கர்நாடகா): கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்தில் சீனாவைச் சேர்ந்த 2 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
ரிலையன்ஸ் காஸ் போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு நிறுவனத்தின் சாப்ட்வேர் பிரிவில் பணியாற்றும் 2 சீன சாப்ட்வேர் என்ஜீனியர்கள் உள்ளிட சிலர், வேன் ஒன்றில், ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், பசவகல்யாண் என்ற இடத்தில் வேன் வந்தபோது லாரி ஒன்று மோதியது. இதில் இரு சீன சாப்ட்வேர் என்ஜீனியர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications