விமானக் கடத்தல் மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு

உ.பி. மாநிலம் கான்பூர் நகர போலீஸாருக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி தகவல் வந்தது. அதில் பேசிய நபர், டெல்லி - கான்பூர் விமானம் கடத்தப்படவுள்ளது. முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். விமானத்தில் வெடிகுண்டும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கான்பூர் போலீஸார், டெல்லி விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடத்தல் குறித்த விவரத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. கான்பூர் விமானத்திலும் முழுமையாக சோதனை நடந்தது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்த தீவிர சோதனை மற்றும் விசாரணையில், கடத்தல் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இதையடுத்து 42 பயணிகளுடன் கான்பூர் விமானம் பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பிச் சென்றது.
நேற்றுதான் மத்திய சிவில் விமான பாதுகாப்புக் கழகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஒரு எச்சரிக்கை அறிவிக்கையை அனுப்பியிருந்தது.
அதில், இன்னும் 15 நாட்களில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிகாத் இ இஸ்லாமி ஆகிய தீவிரவாத அமைப்புகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுப் பிரிவு எச்சரித்திருப்பதால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி - கான்பூர் விமானத்திற்கு மிரட்டல் வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications