குஜராத்தில் இல.கணேசன் பிரச்சாரம்
வேலூர்: நான் ஒரு இந்துவாக இருந்த போதிலும், ஏசுநாதர் படம் இருக்கும் பகுதியின் அருகே நான் செருப்பு காலுடன் செல்ல மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூரில் மாவட்ட பாஜக சார்பில் ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 11 பேர் கொண்ட குழுவினர் செல்ல இருக்கிறோம். அந்த குழுவில் நானும் இடம் பெற்றுள்ளேன். இதற்காக அனைவரும் குஜராத் புறப்பட்டு செல்ல இருக்கிறோம். ஏற்கனவே ஒரு குழுவினர் குஜராத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ராமர் பால பிரச்சனையில் மக்கள் கருத்தை அறியும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் 20,000 மனுக்கள் வந்துள்ளதாகவும், அதில் அரசின் நிலைக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள். மனுக்களின் எண்ணிக்கையைவிட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாள், துக்க நாள் என்கிறார்கள். அயோத்தியில் டிசம்பர் 6ம் தேதியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் இங்கு பதட்டமாக இருக்கிறார்கள். பயங்கரவாதிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்கிறார்கள். ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
ஆனால் எங்களை பொறுத்தவரை டிசம்பர் 6ம் தேதியை அம்பேத்கர் நினைவு நாளாக கடைபிடிக்கிறோம்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டு விட்டதா அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் அது குறித்து ஆந்திர அரசு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அணைகட்டும் திட்டத்தை கைவிடும்வரை பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தும்.
சாமி விக்ரகங்கள் முன்னர் நடிகை குஷ்பு செருப்புக்காலுடன் இருந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். சத்யராஜ் தெய்வ நம்பிக்கை இல்லாதவர். அதனால் தான் அப்படி சொல்லியிருக்கிறார்.
நான் ஒரு இந்துவாக இருந்த போதிலும், ஏசுநாதர் படம் இருக்கும் பகுதியின் அருகே செல்ல நேரிட்டால் கண்டிப்பாக செருப்புக் காலுடன் செல்லமாட்டேன். அதற்கு காரணம் என்னுடைய மதம் அப்படிப்பட்ட பண்பாடோடுதான் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.
குஷ்பு பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் இல.கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications