சோம்நாத் சாட்டர்ஜி சென்ற விமானத்தில் கோளாறு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பயணித்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சோம்நாத் உள்ளிட்ட 146 பயணிகளும் வேறு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் 146 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் நேற்று மாலை டெல்லிக்குக் கிளம்பியது.
விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. சோம்நாத் உள்ளிட்ட அனைவரும் வேறு விமானத்தில் மாற்றப்பட்டு அந்த விமானம் டெல்லி கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications