For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயின் ஈடிஏ அஸ்கான் இந்தியாவில் விமான சேவை

By Staff
Google Oneindia Tamil News


துபாய்: துபாயின் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஸ்டார் ஏவியேஷன், இந்தியாவில் விரைவில் குறைந்தபட்ச கட்டண விமான சேவையை துவக்க இருக்கிறது.

இதுகுறித்து ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சலாகுதீன் கூறியதாவது,

ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஸ்டார் ஏவியேஷன் 3 முதல் 5 விமானங்களைக் கொண்டு தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படும்.

இந்த சேவை 6 அல்லது 9 மாதங்களில் துவங்கும். இது தவிர மதுரை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய தென்னிந்திய நகரங்களை இணைக்கும் வண்ணம் தனது சேவையை ஸ்டார் ஏவியேஷன் துவங்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X