For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகரிக்கும் திறமைக் குறைவு-இன்போசிஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Infosys
மும்பை: இந்தியாவில் திறமையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பெரும் பாதிப்பை நாடு சந்திக்க நேரிடும். எனவே உயர் கல்வித்துறைக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவன இயக்குநர் குழு உறுப்பினர் டி.வி.மோகன்தாஸ் பய் கூறியுள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருப்பது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோ அல்லது முதலீடுகளோ அல்ல. திறமையாளர்களின் தேவைதான் இப்போதைய முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

உயர் கல்வித்துறைக்கு மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் திறமையாளர்களுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டு நாடு பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி இதுதொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளார். உயர் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார். பிரதமரும் இதுகுறித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

தற்போது உள்ள கல்வி முறையால், திறமையாளர்கள் உருவாவதற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான நல்ல திறமையாளர்கள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது.

நல்ல திறமையான சாப்ட்வேர் என்ஜீனியர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த ஆண்டு ஆண்டு இறுதிக்குள் புதிதாக 4.3 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையில் சேருவார்கள். அதில் இன்போசிஸ் நிறுவனம் 30 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

நல்ல திறமையாளர்களை அடையாளம் காணுவதற்காக நாடு முழுவதும் உள்ள 1000 பொறியியல் கல்லூரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். எங்களது இந்தப் புதிய திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயர் கல்வித்துறையை சீரமைக்க ஆறு அம்சத் திட்டத்தை இன்போசிஸ் முன்வைத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும், ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பதே இன்போசிஸ் முன்வைத்துள்ள ஆறு கோரிக்கைகள் ஆகும் என்றார் பய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X