சீன தமிழ் ரேடியா நேயர்களுக்கான போட்டி
பீஜிங்: 29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 29வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகலை நேரில் கண்டுகளிக்க சீன வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்விளையாட்டில் பொம்மை புதிர்கள், இணைய வினாவிடை, என் மனதில் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் ஆகிய 3 பகுதிகள் உள்ளன.
புதிர்கள் பகுதியை நிறைவேற்றியப் பின் தான், இணைய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். 8 வினாக்களுக்கு சரியான விடைகள் அளித்து, ஒலிம்பிக் பற்றிய கருத்துக்களை எழுதிய நண்பர்களுக்கு முதல் பரிசு பெறும் வாய்ப்புண்டு.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசுப் பெற்றவர்களிடையில் சிறப்புப் பரிசு பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சிறப்புப் பரிசு பெற்றவர்கள் ஆகஸ்ட் மாதம் பீஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டுகளித்து, சீன விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து பேசலாம். பீஜிங் செல்ல உள்ளவருக்கு சீன வானொலி நிலையம் ஆச்சரியப்படும் வகையில் பரிசுகளை அளிக்க உள்ளது.
சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.
மேலும் விபரங்களுக்கு ttp://tamil.cri.cn/other/contest2008/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
போட்டியில் கலந்து கொண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை காண வாழ்த்துக்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications