For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு தொடர்ச்சி மலையில் கொள்ளை போகும் மூலிகை செடிகள்

By Staff
Google Oneindia Tamil News


நெல்லை: நெல்லை மாவட்டத்தில், தமிழக, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், கொடிகள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் புகழ் வாய்ந்த பெருகை நதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி முதல் தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மேக்கரை, வடகரை, கருப்பாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழக வனப்பகுதி.

இந்த வனப்பகுதிகளின் உள்ளே அரிய வகை மூலிகைகள், அரிய வகை விலங்கினங்கள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, மான், மிளா வகைகளும் உள்ளன.

சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் ஆசியோடு அரிய வகை மூங்கில்கள், பிரம்பு என்றழைக்கப்படும் மூலிகை கொடிகள், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களும், வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பிரம்பு, இருக்கைகள், சோபா, கட்டில், டீபாய், ஊஞ்சல் போன்றவை செய்ய பயன்படுகிறது. செங்கோட்டை, பிரானூர் பார்டர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலை நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு வடநாட்டிலிருந்து பிரம்பு மூங்கிலை வாங்கி வந்து அதன் மூலம் தொழில் புரிவதாக காட்டிக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமாக விளைந்து, வளர்ந்து அடர்ந்து கிடக்கும் பிரம்பு மூங்கிலை வனத்துறையினரின் ஆசியோடு வெட்டி கடத்தி வந்து வியாபாரத்தை வளப்படுத்தி வருகின்றனர்.

இந்த அரிய வகை பிரம்பு மூங்கில் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் உள்ள விஐபிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என நெல்லை மாவட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கி விடுவதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்துறையில் பணிபுரிவர்கள் வீடுகளில் அதிகமாக இருக்கும் பொருட்களில் இதுவும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மூங்கில்களை மொத்தமாக வெட்டி மதுரை, திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஜவுளி கடைகளில் தேவைப்படும் பைகளில் கைப்பிடியாக இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அடர்ந்த காடுகளாக இருந்த வனப்பகுதிகளான அடவிநாயினார் நீர்தேக்கம், வடகரை, பழைய குற்றாலம், புளியரை, கண்ணுபுளிமேட்டு ஆகிய பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து விட்டு செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த சமூகவிரோத கும்பலை இதுவரை ரிஷிமுலம் காணாமல் வனத்துறை உள்ளதாகவும் ஒரு சில ஏழைகளை மட்டும் கைது செய்து அடையாளம் காட்டி விட்டு பெரும் புள்ளிகளை காப்பாற்றி விடுவதாகவும், கூறப்படுகிறது.

அரிய வகை இயற்கை வளம் அழிந்து வருவதால் வனங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X