காதலியின் அடைய தங்கையை கடத்தியவர் கைது
சென்னை: தனது காதலியை மணம் புரிய, அவரது தங்கையை கடத்தி வைத்து மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் இவருக்கு ரமா (20), சுமா (18) என இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (28). இவர் எஸ்டிடி பூத் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்த பூத்துக்கு அடிக்கடி போன் செய்ய வருவார் ரமா. அப்போது அவருக்கும் சுந்தரமூர்த்திக்கும் காதல் மலர்ந்தது. போன் செய்யும் சாக்கில் அடிக்கடி பூத்துக்கு வந்து காதலை வளர்த்துள்ளார் ரமா.
இது சாமிக்கு தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு மகளை அனுப்பி வைத்தார். காதலியுடனான இணைப்பை சாமி துண்டித்ததால் கோபமடைந்தார் சுந்தரமூர்த்தி.
ரமாவை மணக்க நூதன திட்டத்தை தீட்டினார். அவரது தங்கையிடம் பேசி அவரை ஒரு இடத்திற்கு வர வைத்தார். பின்னர் அவரை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து விட்டார்.
பின்னர் சாமிக்குப் போன் செய்து, ரமாவை எனக்கு கட்டி வைத்து விடுங்கள், அப்போதுதான் சுமா கிடைப்பார் என்று மிரட்டினார்.
இதையடுத்து போலீஸ் உதவியை நாடினார் சாமி. போலீஸார் சுந்தரமூர்த்தி போக்கில் சாமியைப் போக விட்டு அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து சுமாவை பத்திரமாக மீட்டனர்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications