காதலர் தினத்திற்கு எதிர்ப்பு- நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து மகா சபை
திருச்சி: காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக் கோட்டையில் குவிந்த காதலர்களை தாலியை காட்டி இந்து முன்னணியினர் விரட்டியடித்தனர்.
திருச்சி மலைக்கேட்டை காதலர்கள் கூடும் இடமாக இருந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் இங்கு குவிந்தனர். அப்போது அங்கு வந்த தாலிக் கயிறுகளுடன் வந்த இந்து முன்னணியினர் காதலர்களிடம் போய் தாலியை நீட்டி, உங்களது காதல் உண்மையானது என்றால் இங்கேேய இந்த நிமிடத்தில் தாலி கட்டுங்கள் என்று மிரட்டினர்.
சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தனர்.
இந்து முன்னணியின் இந்தச் செயலுக்கு தலித் விடுதலை இயக்கம் கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கூறுகையில்,
காதல் என்பது தனி மனித உரிமை. காதலால் தான் ஜாதி அற்ற உலகத்தை படைக்க முடியும். அடுத்தவர் காதல், திருமணத்தில் தலையிடுவற்கு இந்து முன்னணி அமைப்பினருக்கு எந்த உரிமையும் இல்லை.
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்த காதலர்களை தடுத்து இம்சை செய்த இந்து முன்னணியினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நாய்களுக்கு திருமணம்:
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மகா சபையினர் சார்பில் நாகர்கோவிலில் நாய்களுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.
காதலர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை கண்டித்து குமரி மாவட்ட இந்து மகா சபை சார்பில் நேற்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆண் நாய், பெண் நாய் இரண்டையும் பிடித்து குளிக்க வைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு கொண்டு சென்று முடிகளை திருத்தி அழகு செய்தனர்.
பின்னர் மாலை அணிவித்து இரண்டு நாய்களையும் ஊர்வலமாக அழைதது வந்தனர். காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் பீச் ரோட்டில் புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத மேள தாளங்கள் முழங்க இரண்டு நாய்கள் கழுத்தில் கிடந்த மாலைகளும், மாற்றப்பட்டு, திருமணம் நடந்தது.
பின்னர் அவை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. ஆண் நாய்க்கு கருப்பு கலரில் சட்டையும், பெண் நாய்க்கு கருப்பு கலரில் சேலையும் அணிவித்து படு ஜோராக அவற்றை அலங்கரித்திருந்தனர்.
ஆண் நாயின் கையில் (காலில்) தாலியை கொடுத்து பின்னர் அதை வாங்கி பெண் நாய் கழுத்தில் அணிவித்தனர்.
இதற்கிடையில் நெல்லை மாவட்ட சிவசேனா கட்சி தலைவர் முத்தையா தலைமையில் அக்கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிதது ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications