வருகிறது 'நியூஸ் எக்ஸ்'-கரன் தாப்பருடன் ஒப்பந்தம்
மும்பை: ஐஎன்எக்ஸ் நியூஸ் டிவி விரைவில் தொடங்கவுள்ள ஆங்கில செய்தி சேனலான 'நியூஸ் எக்ஸ்' டிவியின் எடிட்டோரியல் ஆலோசகராக கரண் தாப்பரின் ஐடிவியை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நியூஸ் எக்ஸ் டிவியின் அனைத்து வித வளர்ச்சியையும், ஐடிவி பார்த்துக் கொள்ளும்.
கடந்த 2001ம் ஆண்டு கரண் தாப்பர் ஐடிவியை உருவாக்கினார். அன்று முதல் பிபிசி, சேனல் நியூஸ் ஏசியா, சிஎன்பிசி டிவி 18, சிஎன்என் ஐபிஎன், தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு சேனல்களுக்கு நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுத்துள்ளார் கரண் தாப்பர்.
இந்தப் புதிய ஒப்பந்தம் குறித்து ஐஎன்எக்ஸ் நியூஸ் செய்திப் பிரிவு தலைவர் அருப் கோஷ் கூறுகையில், கரண் தாப்பரின் ஐடிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாப்பரின் மிகப் பெரிய அனுபவம், எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
எங்களது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மிகுந்த தரத்துடன் கொடுக்க ஐடிவி பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.