For Daily Alerts
Just In
கோவை: போலீஸ் சுட்டு சந்தன கடத்தல் திருடன் சாவு
கோவை: கோவையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்ற சந்தனக் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த காவலர்கள் பாரதி பூங்கா பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை தாக்கி துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தன மரக் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாரதி பூங்கா பகுதியில், சோலையூர் செல்வம் உள்ளிட்ட 3 சந்தன மரக் கடத்தல்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர். நேற்று இரவு அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது செல்வம் தப்ப முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கோவையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.