ஹைதராபாத் புதிய விமான நிலையம்: சோனியா திறந்து வைத்தார்
ஹைதராபாத்: இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.
ஹைதராபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாம்ஷாபாத்தில், புதிய அதி நவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் முதலாவது தனியார், பொதுத்துறை கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜிஎம்ஆர் குழுமம், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாத், இந்திய விமான நிலைய ஆணையகம், ஆந்திர அரசு ஆகியவை இணைந்து இந்த விமான நிலையத்தைக் கட்டியுள்ளன.
இந்தக் கூட்டுத் திட்டத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனத்தின் பங்கு 63 சதவீதமாகும். மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு 11 சதவீத பங்குகளும், இந்திய விமான நிலைய ஆணையகம், ஆந்திர அரசு ஆகியவற்றுக்கு தலா 13 சதவீத பங்குகளும் உள்ளன.
5400 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 2470 கோடி செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்குள்ள ரன்வே 4.36 கிலோ மீட்டர் நீளமுடையது. ஆசியாவிலேயே இதுதான் நீளமான ரன்வே ஆகும். மேலும் நாட்டிலேயே மிக உயரமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரமும் இங்குதான் உள்ளது. இங்கு 75 மீட்டர் உயரமுடைய கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
தெ. தேசம் எம்.எல்.ஏக்கள் போராட்டம்:
இதற்கிடையே, விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு என்.டி.ஆர் பெயரை வைக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் விமான நிலையத்திற்குச் சென்று போராட்டம் நடத்த பெரும் திரளாக வந்தனர்.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications