For Daily Alerts
Just In
பெங்களூர் அருகே லாரி திருடன் சுட்டுக் கொலை
பெங்களூர்: பெங்களூர் அருகே லாரியைத் திருட முயன்ற டிரைவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பெங்களூர் அருகே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் ரோந்துப் போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லாரி சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அப்போது மூர்த்தி என்பவர் அந்த லாரியை ஓட்டிச் செல்ல முயன்றார்.
இதையடுத்து அவரை லாரியை நிறுத்துமாறு போலீஸார் கூறினர். ஆனால் மூர்த்தி கேட்கவில்லை. வேகமாக லாரியைக் கிளப்ப முயன்றார். மேலும், போலீஸார் இருந்த ஜீப் மீது லாரியை ஏற்றவும் முயன்றார்.
இதையடுத்து ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மூர்த்தியை துப்பாக்கியால் சுட்டார். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பிணமானார்.
இந்த சம்பவத்தில் 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.