ஏரிக்குள் விழுந்த ஜேம்ஸ் பாண்ட் கார்!
இச் சம்பவம் நேற்று முன் தினம் (சனிக்கிழமை, 19.04.08) நடந்தது.
1.2 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்த ஸ்போர்ட்ஸ் கார், புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலாஸ் படத்துக்காக உருவாக்கப்பட்டது.
இங்கிலாந்து, பனாமா, சிலி, மெக்சிகோ என பல நாடுகளிலும் படப் பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.
இத்தாலியின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருந்தது. இதற்காக இந்த கார் விமானம் மூலம் இத்தாலி கொண்டு வரப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு நடக்க இருந்த லேக் கார்டா என்ற ஏரிப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
படப் பிடிப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தக் காரை ஸ்டண்ட் நடிகர் ஒருவர் ஏரியின் கரையோரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்தது.
காரை அவர் ஓரம்கட்ட முயன்றபோது அது தவறி ஏரிக்குள் விழுந்துவிட்டது. இதில் அந்த ஸ்டண்ட் நடிகருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அவரை மீட்டுவிட்டனர்.
ஆனால், கார் இன்னும் ஏரிக்குள் தான் கிடக்கிறது. இந்தப் படத்துக்காக ஒரே ஒரு ஆஸ்டின் மார்ட்டின் காரைத் தான் வடிவமைத்தனர். இதனால் மாற்று கார் இல்லாமல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் கார் சம்பந்தமான காட்சிகளை ஒத்தி வைத்துவிட்டு வேறு காட்சிகளை படமாக்க ஜேம்ஸ் பாண்ட் படக் குழு முடிவு செய்துள்ளது.
டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் இத்தாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஸ்பெயினில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த இருந்தனர்.
இந் நிலையில் கார் தண்ணீருக்குள் போய்விட்டது. இதையடுத்து புதிய காரை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
007க்கு தண்ணீரில் கண்டம் போலிருக்கிறது...!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications