For Daily Alerts
Just In
டிசிஎஸ் லாபம் ரூ. 5,026 கோடியாக அதிகரிப்பு
மும்பை: டாடா கன்சல்டன்சி நிறுவனம் இந்த நிதியாண்டில் ரூ. 5,026.02 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ. 4,212.63 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் டிசிஎஸ்சின் மொத்த வர்த்தகம் ரூ. 18,685.21 கோடியாக இருந்தது. இத இந்த ஆண்டு ரூ. 22,863.39 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் லாபத்தில் 22.36 சதவீத வளர்ச்சி கண்டுள்ள டிசிஎஸ். அமெரிக்க பொருளாதார தேக்கத்தையும் ரூபாய் மதிப்பு உயர்வையும் மீறி இந்த சாதனையை படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டிலும் இதைவிட அதிக வளர்ச்சியை எட்டிக் காட்டுவோம் என டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி ராமதுரை கூறியுள்ளார்.