For Daily Alerts
Just In
பென்சில்வேனியா வாக்கெடுப்பில் ஹிலாரி வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்தவற்கான மாகாண வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி பாரக் ஓபாமா வாக்குகள் அடிப்படையில் முன்னணியில் உள்ளார். ஹில்லாரி பின் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பென்சில்வேனியாவில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஹில்லாரி வெற்றி பெற்றார். இங்குள்ள மொத்தம் 158 கட்சிப் பிரதிநிதிகளில் 55 சதவீதம் பேரின் வாக்குகளை ஹில்லாரி பெற்றார். ஓபாமாவுக்கு 45 சதவீதம் பேரின் வாக்குகள் கிடைத்தன.
ஹில்லாரிக்கு பெண்ள், வயதான அமெரிக்கர்கள் ஆகியோர் மத்தியில் இங்கு அதிக ஆதரவு காணப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் ஓபாமா தோற்றாலும் கூட வாக்குகள் எண்ணிக்கையில் அவர்தான் முன்னணியில் உள்ளார். அவரிடம் தற்போது 1705 வாக்குகள் உள்ளன. ஹில்லாரி 1575 வாக்குகளுடன் உள்ளார்.