For Daily Alerts
Just In
மனைவியை துன்புறுத்திய சந்தேக கணவர் கைது
தூத்துக்குடி: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்திய கணவரை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் நட்டார்முத்து. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கவிதாவை நட்டார்முத்து அடிக்கடி அடித்து உதைப்பாராம்.
கணவரின் சந்தேகத்தாலும், துன்புறுத்தலாலும் தாங்க முடியாமல் மனஉளைச்சலான கவிதா இது பற்றி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நட்டார் முத்துவை கைது செய்தனர்.