For Daily Alerts
Just In
மு.க. ஸ்டலினுக்கு கறுப்பு கொடி !
தாராபுரம்: தாராபுரம் வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி காட்ட கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.
பரமத்திவேலூர் கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு ஆதரவாளர்களுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்தனர்.
கலவரத்தை தூண்டியதாக கூறி கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில் இன்று அமைச்சர் ஸ்டாலின் தாரபுரத்தில் பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
தனியரசு உள்பட 45 பேரை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், இதற்கு காரணமான போலீசாரை கைது செய்யக் கோரியும் ஸ்டலினுக்கு கறுப்பு கொடி காட்ட கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளனர்.