சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.7 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்து பிலிப்பைன்ஸ் பயணியிடமிருந்து ரூ. 2.7 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னை வந்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரேச்சால் டேக் விங் (37) என்பவர் கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க காத்திருந்தார்.
இவர் ஹெராயின் கடத்துவதாக சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையம் விரைந்த அவர்கள் அவரது சூட்கேஸ்களை சோதனையிட்டபோது ஹெராயின் பிடிபட்டது.
இதன் மதிப்பு ரூ. 2.7 கோடியாகும்.
ரூ. 1 கோடி கேட்டமைன் பறிமுதல்
அதே போல விமான நிலையத்தில் திருவாரூரைச் சேர்ந்த அழகேசன் (30) என்பவரை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவர் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கேட்டமைன் ஹைட்ரோகுளோரைட் மருந்தை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.