நகராட்சி தலைவர் மீது நில அபகரிப்பு புகார்!
மதுரை: நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்த மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மதுரை புறநகர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தாயர் லலிதாவுக்கு சொந்தமான 3 ஏக்கர் 46 செண்ட் நிலம் வலையங்குளத்தில் உள்ளது.
இந்த நிலத்தை அபகரிக்க வலையங்குளம் செல்லன் மகன் அய்வன் தாசில்தாரிடம் போலி ஆவணங்கள் கொடுத்து பட்டா பெற முயற்சி செய்தார்.
இதையடுத்து உரிய ஆவணங்களை தாசில்தாரிடம் கொடுத்து அவர்களது மோசடியை அம்பலப்படுத்தினோம். இது சம்பந்தமாக வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, அய்வன் மற்றும் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் எங்களது நிலத்தில் புகுந்து மரங்களை வெட்ட முயன்றனர். அதை தடுத்த என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளித்து நீதி வழக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை விசாரிக்க பெருங்குடி போலீசாருக்கு மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் பெருங்குடி போலீசார் மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, அய்வன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அய்வன் கைது செய்யப்பட்டார்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications