சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்குலி மே 19ல் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி வரும் 19ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று பிறப்பித்தார். ஏ.கே.கங்குலி சென்னை உயர்நீதிமன்றத்தின் 23வது தலைமை நீதிபதி ஆவார். வரும் 19ம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1970ம் ஆண்டு கோல்கத்தா பல்கலையில் எல்எல்பி பட்டம் முடித்த கங்குலி, கோல்கத்தா உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1994ல் கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கோல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரிசா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications