For Daily Alerts
Just In
காஞ்சிபுரத்தில் மே 24ம் தேதி ஸ்ரீவாரி கல்யாணம்
காஞ்சிபுரம்: மும்பை, சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஸ்ரீவாரி கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
திருப்பதி வெங்காடசலபதி திருக்கல்யாணத்தை திருப்பதியைத் தாண்டி பல்வேறு நகரங்களில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்தது.
இதையடுத்து முதன் முதலில் மும்பையிலும், பிறகு சென்னையிலும் ஸ்ரீவாரி கல்யாணம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்ததாக காஞ்சிபுரத்தில் மே 24ம் தேதி ஸ்ரீவாரி கல்யாணம் நடைபெறவுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக, இக் கல்யாண வைபவத்தை சங்கர மடம் சார்பில், ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.