For Daily Alerts
Just In
கொடைக்கானல்-200 அடி பள்ளத்தில் உருண்ட சிலிண்டர் லாரி
கொடைக்கானல்: கொடைக்கானல் மலையில், 200 அடி பள்ளத்தில் சிலிண்டர் லாரி உருண்டு விழுந்தது.
கோவையில் இருந்து கேஸ் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நேற்று முன் தினம் இரவு கொடைக்கானலுக்கு புறப்பட்டது.
நேற்று பழனி மலை சாலையில் வெள்ளப்பாறை என்ற இடத்தில் அந்த லாரி சென்ற போது ஸ்டியரிங் திடீரென வேலை செய்யவில்லை. இதையடுத்து லாரி டிரைவர் ரமேஷ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது.
தாறுமாறாக ஓடிய லாரி 200 அடி மலைப்பள்ளத்தில் விழுந்து உருண்டது. லாரியில் இருந்த சிலிண்டர்களும் சிதறி விழுந்தன. லாரி டிரைவர் ரமேஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ்குமார் மற்றும் சிதறிய சிலிண்டர்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தால் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.