எஸ்எஸ்எல்சி-பாளை மாணவி மாநிலத்திலேயே முதலிடம்

Subscribe to Oneindia Tamil
Ram Ambikai
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து நெல்லை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

496 மதி்ப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ராம் அம்பிகை.

இவர் பாளை செயிண்ட் இக்னேசியஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் ஆவார். இவரது தந்தை ராம்கோபால் நெல்லை அகில இந்திய வானொலி நிலைய கடை நிலை ஊழியராவார். தாயார் வெள்ளையம்மாள்.

ராம் அம்பிகை எடுத்துள்ள மதிப்பெண்கள்:

தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணக்கு - 100
அறிவியல் - 99
சமூக அறிவியல்- 100

500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று 2 மாணவர்களும் 2 மாணவிகளும் மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

அவர்களது விவரம்:

1. ஜோசப் ஸ்டாலின், செயிண்ட் ஜான் மேல் நிலைப் பள்ளி, வீரவநல்லூர், சேரண்மாதேவி, நெல்லை மாவட்டம்

2. ஷகீனா, சாரா டக்கர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை

3. மருதுபாண்டியன், ஹான்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளி, பெரம்பலூர்

4. ஸ்வேதா, செயிண்ட் ரபேல்ஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, சாந்தோம், சென்னை

493 மதிப்பெண்கள் பெற்று 8 மாணவ-மாணவிகள் மாநிலத்திலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

அவர்களது விவரம்:

1. என். ராம சுவாதிகா, செயிண்ட் இக்னேசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை

2. ஜி.கே. உமாபிரியா, செளராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை

3. கே. இந்து, செயிண்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்

4. எஸ். செல்வராஜ், ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி, புலியூர், கரூர் மாவட்டம்

5. ஜி. காயத்ரி, அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி

6. எம். ரபீகா பேகம், அரசு மேல்நிலைப் பள்ளி, தாமரன்கோட்டை, பட்டுக்கோட்டை

7. எம். திருமால், ஏ.கே.டி. நினைவு மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்

8. வி. எம்லின் மெர்சி, செயிண்ட் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு

தமிழில் 3 பேர் முதலிடம்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தூத்துக்குடி ‌ஹோலி கிராஸ் பள்ளி மாணடி மோனிஷா, மதுரை திருநகர் சீதாலட்சுமி பள்ளி மாணவி புவனேஸ்வரி, திண்டுக்கல் எம்.எஸ்.பி.எஸ்.என். மெமோரியல் பள்ளி மாணவர் அன்புசெல்வம் ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்களை‌ பெற்றுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற