வேட்பாளராகும் ஓபாமா-ஹிலாரி வாய்ப்பு மங்கியது
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியான வேட்பாளராகும் வாய்ப்பு பாரக் ஓபாமாவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட வேட்பாளராகும் வாய்ப்பை இழந்துள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் ஏற்கனவே தேர்வாகி விட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதில்தான் இழுபறி நிலவுகிறது.
பாரக் ஓபாமாவுக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு பெற தேவையான வாக்குகள் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி 2118 வாக்குகளாக தேவையான வாக்குகளின் அளவு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது ஓபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஹில்லாரிக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அவருக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டதாகவே கருதலாம்.
இந்த நிலையில், பியூர்டாரிகோ மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரி வெற்றி பெற்றுள்ளார். இங்கு நடந்த வாக்குப் பதிவில், ஹில்லாரிக்கு 68 சதவீத வாக்குகளும், ஓபாமாவுக்கு 32 சதவீத ஆதரவும் கிடைத்தன.
இருப்பினும் தற்போது ஓபாமாவிடம் 2070 வாக்குகள் உள்ளன. இன்னும் 48 வாக்குகளை அவர் பெற்றால் 2118 என்ற இலக்ைக எட்டி விடலாம். புளோரிடா மற்றும் மிச்சிகன் மாகாண வாக்கெடுப்பு இன்னும் பாக்கியுள்ளது. எனவே ஓபாமாவுக்கு வெற்றி உறுதியாகி விட்டது.
அதேசமயம், ஹில்லாரி கிளிண்டன் 1915 வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளார். ஹிலாரிக்கு 1915 வாக்குகள் மட்டுமே உள்ளன. அவருக்கு 203 வாக்குகள் தேவை. ஆனால் தனக்குத் தேவையான 48 வாக்குகளை ஈசியாக ஓபாமா எடுத்து விட முடியும் என்பதால் அவரே வேட்பாளராக தேர்வாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.