திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்
வாலாஜா: அரசின் சலுகையைப் பெறுவதற்காகவும், மீண்டும் இலங்கை செல்லும்போது சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், 51 இலங்கை அகதி ஜோடிகள் தங்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அணைக்கட்டு முகாமில் ஏராளமான இலங்கை அகதிகள் உள்ளனர். இவர்களில் பல அகதிகள் முகாமுக்கு வந்த பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இதைப் பதிவு செய்யாமல் இருந்து வந்தனர்.
இதன் காரணமாக, இவர்களுக்கு அரசின் பல சலுகைகள் கிடைக்காமல் இருந்து வந்தது. மேலும் எதிர்காலத்தில் இலங்கை செல்லும்போது திருமணப் பதிவுச் சான்றிதழ் இருந்தால்தான் மனைவியரோடு இலங்கை திரும்ப முடியும் என்ற நிலையும் உள்ளது.
இதையடுத்து அணைக்கட்டு முகாமில் உள்ள 51 ஜோடிகள் மீண்டும் திருமணம் செய்யும் வைபவம் முகாமில் நடந்தது. ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ காந்தி முன்னிலையில் 51 ஜோடிகளும், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு பதிவேட்டில் கையெழுத்திட்டு தங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர்.
இந்த திருமண வைபவத்தில் அகதிகள் முகாமைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் குழந்தைகளும் திரண்டு வந்து தங்களது பெற்றோரின் திருமணத்தைப் பார்த்து ரசித்ததுதான் இதில் 'ஹைலைட்'டான அம்சம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications