எனக்கே போக்கு காட்டிய ஜெ: தாக்கும் ஜோதி
மன்னார்குடி: மூன்றாவது அணி அமைக்க சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த எனக்கே போக்கு காட்டி ஜெயலலிதா ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார், சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது திமுகவில் இணைந்துள்ள வழக்கறிஞர் ஜோதி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகர திமுக சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழக்கறிஞர் ஜோதி பேசுகையில், ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 20 பேருக்ககாக எனது சொந்த வழக்குகளை கூட விட்டு விட்டு, கடந்த திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட 43 வழக்குகள் உள்பட 218 வழக்குகளை கடந்த 12 வருடங்களாக நடத்தி வந்தேன்.
பதவி கிடைக்கவில்லை என்பதற்காக திமுகவில் சேரவில்லை. புகுந்த வீட்டிற்குள் நுழைந்த மருமகள், பிறந்த வீட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பது போல சில சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கிறேன்.
மூன்றாவது அணி அமைக்க அமர்சிங்குடன் பேசி ஏற்பாடு செய்து கொடுத்த எனக்கே போக்கு காட்டி ஜெயலலிதா ஏமாற்றி விட்டார்.
அதிமுக தனி நபர் கட்சியாக மாறிவிட்டது. அங்கு சுய மரியாதை என்பது சுத்தமாக கிடையாது. அதனால் தான் விலகினேன். உயிருக்கு மிரட்டல்கள் வரவே தான் திமுகவில் இணைந்தேன் என்றார் ஜோதி.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications