'ராஜ் நியூஸ்' செய்தி சேனல்: தொடங்கி வைத்தார் கருணாநிதி
சென்னை: ராஜ் டிவியின் 24 மணி நேர செய்தி சேனலான ராஜ் நியூஸ் 24x7-ஐ முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
ராஜ் டிவி குழுமத்திலிருந்து புதிதாக ராஜ் நியூஸ் 24x7 என்கிற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி புதிய செய்தி சேனலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜ் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், இயக்குநர் ரவீந்திரன் பேசுகையில், இந்த செய்தி சேனலில், 24 மணி நேரமும் செய்திகள், வர்த்தக செய்திகள் உள்ளிட்டவை ஒளிபரபபாகும்.
பங்கு சந்தை நிலவவரம், நாட்டு நடப்பு, சுகாதாரம், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, சாதனையாளர்கள் குறித்த செய்தி, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
பங்குச் சந்தை நிலவரங்களை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.
ஹல்லோ சந்தை, சந்தை நேரம் ஆகிய இரு நிகழ்ச்சிகள், பங்குச் சந்தை தொடர்பாக ஒளிபரப்பாகும்.
இதுதவிர, ராஜ் வணிக உலகம் என்ற வாராந்திர வர்த்தக நிகழ்ச்சியும் இடம்பெறும். ராஜ் நியூஸ் சேனல், கட்டணமில்லா சேனலாகும்.
தெலுங்கிலும் இதே போன்றதொரு 24 மணி நேர சேனலை தொடங்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications