சொத்துக்காக கணவருடன் சேர்ந்து தந்தையைக் கொன்ற மகள் கைது
சென்னை: தனது தந்தையின் ரூ. 2 கோடி சொத்தை அபகரிக்க, கணவருடன் சேர்ந்து தந்தையைக் கொன்ற மகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு லோகநாதன் 1வது தெருவில் வசித்து வந்தவர் ரங்கநாதன். 68 வயதான இவர் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். இவருக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வீடுஉள்ளது.இந்த வீட்டில் மனைவி இந்திராணியுடன் வசித்து வந்தார்.
இவருக்கு பிரேமா, சாந்தீஸ்வரி, கலைச்செல்வி என 3 மகள்களும், ரவி என்கிற மகனும் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் கல்யாணமாகி விட்டது. ரவிக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை.
பிரேமாவும், சாந்தீஸ்வரியும் கணவர்களை விட்டுப் பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர். கலைச்செல்வி, கணவர் ஜெகநாதனுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 20ம் தேதி ரங்கநாதன் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். முதலில் இது இயற்கையான மரணமாக கருதப்பட்டது. ஆனால் கலைச்செல்வி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுந்தர் என்பவர்தான் தனது தந்தையைக் கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் சுந்தர் நிரபராதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து கலைச்செல்வி மீது போலீஸாருக்கு சந்தேகம் திரும்பியது. அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தியபோது கணவருடன் சேர்ந்து கலைச்செல்விதான் இக்கொலையைச் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கலைச்செல்வி, ஜெகநாதனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ரங்கநாதன் வாங்கிய ரூ. 7 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்ததால் அவருக்கு நோட்டீஸ் வந்தது. இதையடுத்து தனது வீட்டை விற்று கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்தை பிள்ளைகள் நான்கு பேரும் பங்கு எடுத்து கொள்ளுமாறு ரங்கநாதன் கூறியுள்ளார். வீட்டை விற்கும் பொறுப்பை கலைச்செல்வி மற்றும் ஜெகநாதனிடம் கொடுத்தார்.
அதற்கு முதல்கட்டமாக வீட்டை, கலைச்செல்வி பெயருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். இந்த நிலையில்தான் வீட்டை அப்படியே அபகரித்துக் கொள்ள கலைச்செல்வியும், ஜெகநாதனும் திட்டமிட்டுள்ளனர். இதுரங்கநாதனுக்கு தெரியவந்ததும் கலைச்செல்வியை திட்டியுள்ளர்.
மேலும், கலைச்செல்விக்கு எழுதித் தந்த பத்திரத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கலைச்செல்வி கொடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து தந்தையைக்கொன்று விட கலைச்செல்வி தீர்மானித்தார்.
20ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த தந்தையை கலைச்செல்வியும், ஜெகநாதனும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை திணித்து அடித்து உதைத்துள்ளனர். இதில் ரங்கநாதன் உயிரிழந்தார்.
பக்கத்து வீட்டு சுந்தருக்கும், ரங்கநாதனுக்கும் இடையே முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டதைப் பயன்படுத்தி அவர் மீதுகொலைப் பழியை போட்டு விட்டார் கலைச்செல்வி.
இருவரிடமும் வாக்குமூலம் பெற்ற போலீஸார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications