வைரஸை 'விரட்டும்' கழுதை பால் விற்பனை ஜோர்!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 8 மாதங்களுக்கு முன் சிக்குன்குன்யா நோய் பொதுமக்களைத் தாக்கியது. அப்போது கழுதை பால் வாங்கி குடித்தவர்களுக்கு நோயிலிருந்து நிவாரணம் கிடைத்ததாக பரவலாக்க் கூறப்பட்டது.
மேலும் கழுதை பால் குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை, ஊதுகாமாலை, சொரி, சோகை மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் கை, கால் குடைச்சல் போன்ற நோய்களுக்கும் சிறந்த மருந்தாகக் கருதப்பட்டு வருகிறது.
இதற்காக சிலர் தாங்கள் வளர்த்து வந்த கழுதைகளுடன் ஊர் ஊராகச் சென்று ஒரு சங்கு ரூ.10க்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நெல்லையிலும் கழுதைப் பால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
திருச்சியிலிருந்து குடும்பத்துடன் வந்துள்ள சிலர் நெல்லையில் முகாமிட்டு அங்கிருந்து காலையில் பல்வேறு பகுதிகளுக்கு கழுதைகளுடன் சென்று பால் கறந்து விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து அவர்களிடம் நமது நெல்லை நிருபர் விசாரித்ததில், ஒரு சங்கு பால் ரூ.10க்கு விற்பனை செய்வதாகவும், இதில் ஒரு நாளைக்கு ரூ.200 கிடைப்பதாகவும் தெரிவித்தனர். இதை வைத்துதான் இவர்கள் பிழைப்பை நடத்துகிறார்களாம். நமது செய்தியாளர் எதிரிலேயே ஏராளமான பெண்கள் தங்கள் கைகுழந்தைகளுக்கு ஆர்வத்துடன் கழுதை பால் வாங்கிக் கொடுத்தார்களாம்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, குழந்தைகளைத் தாக்கும் பலவித நோய்களுக்கு கழுதைப்பால் சிறந்த மருந்து என்பது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வரும் வழக்கம். அதைத்தான் இப்போது நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எந்த நோயும் எங்கள் குழந்தைகளை அண்டாது, என்றனர் அப்பெண்கள்.
குழந்தைகள் நல சிறப்பு அரசு மருத்துவர் சி.ராஜேஷ்கண்ணன் இதுகுறித்து கூறியதாவது:
இதை மூடத்தனமான மருத்துவம் என்று சொன்னாலும் மிகையில்லை.
சூடு பண்ணாமல் கொடுக்கப்படும் எந்த பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப்பால் மட்டுமே இதில் விதிவிலக்கு. இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்கைகளால் நோய் கிருமிகள் குழந்தைகளை கடுமையாகத் தாக்கும். மேலும் இத்தகைய பால் ஜீரணம் ஆக நெடுநேரம் பிடிக்கும்.
இதன் மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொற்று நோய்கள் உடலுக்குள் உருவாகும் நிலை ஏற்படும்.
இதனால் பின்னாளில் மிருகத்திலிருந்து வரும் நோய்கள் பல மனிதர்களைத் தாக்கும் அபாயமும் உள்ளது. மருத்துவ வசதியற்ற காலகட்டத்தில் அறியாமையினால் நம் முன்னோர்கள் இதுபோன்ற செயல்களில் இறங்கியிருப்பார்கள். அதனை இன்றும் நாம் தொடர்வது வடிகட்டின மூடத்தனம், என்றார்.
எத்தனை பெரியார் வந்தாலும் ...
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications