மத்திய அரசுக்கு எதிராக தமிழக கட்சிகள் திரள நெடுமாறன் அழைப்பு
சென்னை: இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என தமிழீழ விடுலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய்சிங் ஆகியோர் திடீரென கொழும்பு சென்றுள்ளனர்.
என்ன நோக்கத்துடன் இவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் மற்றும் செயலாளர் இக்குழுவில் சென்றிருப்பது ராணுவ உதவிகள் அளிப்பது தொடர்பாக பேசுவதற்காகவே என்பது வெளிப்படையாக தெரிகிறது.
ஏற்கனவே நார்வே சமரசத் தூதரை சிங்கள அரசு தன்னிச்சையாக திருப்பி அனுப்பியதை கண்டிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி ஆகியவற்றை நிறுத்தியுள்ளன. இலங்கையில் நடைபெறும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுள் பலவும் வன்மையாக கண்டித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய அரசு இலங்கைக்கு அண்மையில் பெருமளவு நிதியுதவி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது ராணுவ ரீதியான உதவிகள் அளிப்பதற்கு முன்வந்துள்ளது என்பதைஇக்குழுவினரின் கொழும்பு பயணம் உறுதி செய்துள்ளது.
தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை தடுத்திட தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications