தமிழக நதிகள் இணைப்பு: கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. முதல் கட்டமாக மாயனூரில் கதவணை கட்டம் பணிகள், காவிரி, கொள்ளிடக் கரைகளை பலப்படுத்தும் பணிகள், திருச்சி மாநகராட்சி நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் இன்று மாலை நடைபெறுகிறது.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேருரையாற்றுகிறார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி தஞ்சை சென்றார். இன்று காலை 9.30 மணிக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications